Skip to main content

நாற்கர கூட்டில் யப்பானிய மூலோபாயம்

-

By: லோகன் பரமசாமி

Quadrilateral அல்லது Quad countries என்று அழைக்க கூடிய நாற்கர கூட்டு நாடுகளிலே யப்பானின் பங்கு தனித்துவமானது. 1990 களில் அதீதமான சீன வளர்ச்சியின் பின்பு சீனா குறித்து யப்பான் மிகவும் கரிசனை கொண்டிருப்பதாகவே தெரிகிறது.  இதன் அடிப்படையில் இந்தோ-பசுபிக்  பிராந்தியத்திலும் யப்பான் தனித்து புவிசார் மூலோபாய நிலைப்பாட்டை தயார் செய்வதில் முழு முயற்சியுடன் செயற்பட்டு வருகிறதுஐக்கிய அமெரிக்காவும் கூட சீன வளர்ச்சியை கொள்ளடக்கி கொள்ளும் வகையில் தனது தாராள சனநாயக கூட்டு நாடுகளையே தங்கி இருக்க வேண்டியும் உள்ளது.  சர்வதேச பொருளியல் ஆய்வாளர்களின் கருத்துப்படி அண்மையில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் உருவாக்கப்பட்டுள்ள வர்த்தக யுத்த நிலை உலக பொருளாதாரத்தை  நொண்டியாக்கி விட்டிருக்கிறதுஇந்த நிலையில் தற்காலிகமாக  பீஜீங்ரோக்கியோ தலைமைகள்  தமது பொருளாதார நலன்களை மட்டும் அடிப்படையாக கொண்டு தமக்கு மத்தியில்  பல்வேறு இணக்கப்பாடுகளை உருவாக்க தலைப்பட்டுள்ளன.

இத்கைய இணக்கப்பாடுகளுக்குஅமெரிக்க அதிபர் டொனால்ட் ரம், பசுபிக்அப்பால்  ஒப்பந்தத்திலிருந்து (Trans- Pacific Partnership Agreement) விலகி கொண்டமையே முதற் காரணம் என்று அமெரிக்க சிந்தனையாளர்கள் கூறுகிண்றனர்சீன யப்பானிய உறவு கடந்த காலங்களில் பல்வேறுவகையான தன்மைகளை கொண்டிருந்ததுஇரண்டாம் உலகப்போர் காலத்தில் யப்பானிய படையெடுப்புகளால் சீனா மிகவும் பாதிக்கப்பட்டு இருந்த போதிலும்பனிப்போர் காலத்தில் சீன -யப்பானிய உறவு ஒரளவு சுமூகமானதாகவே இருந்திருக்கிறதுஅந்த காலப்பகுதிகளில் சோவியத்சீன முறுகல் நிலையப்பானிய கம்யுனிச எதிர்ப்பு போக்கு போன்றவை இதற்கு காரணமாக இருந்தன. 1989 உலக வரலாற்றின் முடிவாக கருதப்பட்ட கம்யுனிச வீழ்ச்சி தொடக்கம் தியனமன் சதுக்கப் படுகொலைகள் ஆகியவற்றை தொடர்ந்து சீன யப்பானிய உறவில் பெரும் மாற்றங்கள் கண்டது.

மேலை நாடுகள் சீனா மீது பொருளாதார தடைகளை அறிவித்திருந்த போதிலும் வர்த்தக நலன்களின் அடிப்படையில் யப்பான் தொடர்ந்தும் சீனாவுடன் உறவில் இருந்தது எனலாம்ஆனால் சீன  பொருளாதார வளர்ச்சி யப்பானிற்கு, சீனாவின் அணுகுமுறைகள் மீது கவலையையும் பல்வேறு இடங்களில்  ஏமாற்றத்தையும் கொடுத்திருக்கிறது.

1996 ஆம் ஆண்டு தாய்வானில் முதலாவது அரசதலைவர் தேர்தல் இடம் பெற்றபோது, சீனா தனது முதலாவது ஏவுகனை பரீட்சையை மேற்கொண்டதுஇதுவே தம்மை அமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்படிக்கைக்கு எடுத்து சென்றதாக யப்பான் கூறுகிறது.

இரண்டாம் உலக போரில்  யப்பான் செய்த அட்டூழியங்களுக்கு  மன்னிப்பு கேட்கும் என  1998 இல் சீனா எதிர் பார்த்த போதிலும், யப்பான் அதை தவிர்த்து கொண்டதுதொடர்ந்து 2005 அம் ஆண்டு யப்பான் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உரிமை கேட்டு போட்டி இட்ட போது, சீனா தன்னிடம் கடனாளிகளாக இருந்த ஆசிய ஆபிரிக்க நாடுகளின் உதவியுடன் யப்பானின் முயற்சியை தோற்கடித்தது.

மேலும் சீனாவின் இராணுவ நவீனமாக்கல் பொருளாதார வளர்ச்சி என்பன யப்பானிய மக்கள் மட்டத்தில் மிகவும் முக்கியமான பேச்சு பொருளாகியது.  மிகப்பெரிய அளவிலான இராணுவம் , அதீத இராணுவ செலவுகள் கொண்ட வரவு செலவு திட்டம்பிராந்திய ரீதியான விரிவாக்கங்களுக்கான முயற்சி மேலும் அணு ஆயுத நவீன மயமாக்கலும் அணுதொழில் நுட்பத்தை இதர அயல் நாடுகளுடன் பகிர்ந்து கொண்டமை குறிப்பாக வட கொறியா பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் பகிர்ந்து கொண்டமை, மேலும் யப்பானிற்கு சொந்தமான தீவுகளில் சீன கடற் கலங்கள் அத்துமீறி நுளைந்தமை போன்ற விடயங்கள் அனைத்தும்  யப்பானின் கரிசனைகளை வலுவுட்டுவனவாக இருந்தன.

இவ்வாரம் இடம் பெறும் சீன யப்பானிய தலைவர்களுக்கான சந்திப்பு நாற்பது வருடங்களுக்கு முன்பு செய்து கொள்ளப்பட்ட யப்பானிய சீன தோழமை ஒப்பந்தத்தின் ஞபகார்த்தமாகவே தாம் சந்திப்பதாக இரு நாடுகளும் கூறி கொள்கிண்றன.

பல்வேறு இராசதந்திர பிரச்சனைகள் இருந்த போதிலும் வர்த்தக முதலீடுகளில் இவ்விரு நாடுகளுக்கும் இடையில் அவை பெரும் தாக்கத்தை விளைவிக்கவில்லை என்பது முக்கியமானதாகும்இரு நாடுகளுக்கும் இடையில் நடை பெறும் வர்த்தக பரிமாற்றம் பல்வேறு இராசதந்திர பிரச்சனைகளை தீர்த்து கொள்வதற்கு உடந்தையாக இருந்தது.

இருந்த போதிலும் சீனாவின் வளர்ச்சி வேகம் புதிய சர்வதேச சவால் களை தோற்றுவித்து வருகிறதுஅதி உட்-சக்தி வள தேவை, இராணுவ நவீனமயமாக்கலின் அவசியம்  மற்றும் கடல் வளி வியாபார போக்குவரத்தின் அவசியம் அதற்கான சர்வதேச அளவில் வர்த்தக சேமிப்புவினியோக நிலையங்களின் தேவை ஆகியன யப்பானை தனது பாதுகாப்பு மற்றும் பேரம் பேசும் தகுதியை மேலுயர்த்தும் வகையில் அமெரிக்காவுடன் இணைந்து கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளியிருக்கிறது.

நாற்கர கூட்டு நாடுகளின் ஒருங்கிணைப்பில் யப்பான் முதல் கவனம் செலுத்துவதாக இருந்த போதிலும் பொருளாதார போட்டியும்ஒன்றுடன் ஒன்று பினைந்த நிலையும்வரலாற்று வேறுபாடுகளும்நட்பு ஒப்பந்தங்களும்இராணுவ வளர்ச்சியும்கூட்டுறவும் என ஒரு மனோயியல் சம நிலையை இவ்விரு நாடுகளும் பேணி வந்துள்ளன.

ஆனால் அதே காரணங்களை அடிப்படையாக கொண்ட தேவைகளின் படி போட்டி நிலையும் இருந்து வருகிறதுஇந்த போட்டிநிலையை தனக்கு சாதகமாக ஆக்கி கொள்வதில் வல்லரசுகளும்சிறிய நாடுகளும்,  முனைந்து நிற்கிண்றன. அமெரிக்காவின் பார்வையில் சீனாவின் வளர்ச்சியானது, யப்பானை பாதுகாப்பு ஏற்பாட்டுகளைசௌகரிய நிலைக்கு கொண்டு சென்றுள்ளது அத்துடன், இரண்டாம் உலக போர் காலத்திலிருந்து சீனா யப்பானை ஒரு விரோத நாடாகவே பார்த்து வருகிறது என்றும் கருதுகிறது. தென் சீன கடற் பகுதியில் யப்பானிய கடற் கலன்கள் செல்வதற்கு உரிய உத்தரவாதம் இன்னமும் கிடைக்க வில்லை இதனால் சீனா யப்பானுக்கு என்றும் பாதுகாப்பு சவால்களை  கொடுக்கலாம்  என்ற கருத்து உள்ளது.

அதேவேளை நாட்கர கூட்டு ஒப்பந்த  நாடுகளில் ஒன்றான இந்தியாவை பொறுத்த வரையில் அது, யப்பானிய தொழில் நுட்ப திறமையில் அதிக கவனம் கொண்டிருக்கிறதுயப்பானிய திட்டமிடல் தொழில்நுட்ப அறிவு . செயலாற்றல் போன்றவற்ரை யப்பானிடமிருந்து, உள்ளுர் கம்பனிகளுக்கு பெற்ற கொடுப்பதில்  டெல்லி மிவும் ஆர்வமாக உள்ளதுஅதே போல சீனாவில் முதலீடு செய்வதற்கு பதிலாக இந்திய கம்பனிகளில் யப்பானிய முதலீட்டாளர்களை கவர்வதற்குரிய   சூழலை உருவாக்குவதிலும் பெரும் முயற்சிகள் நடை பெற்று வருகிறது.

சீனாவை கையாளுதல் என்ற வகையில் யப்பானும் இந்தியாவும்  தமது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தி கொள்வதில் ஆர்வமாக இருக்கின்ற போதிலும் கூட, இரு நாடுகளுமே சீனாவை சீண்டிப்பார்ப்பதை விரும்பவில்லை என்றே கூறலாம்.

ஆசியா கிழக்கிலும் தெற்கிலும் ஆயிரக்கணக்கான தீவுக்கூட்டங்களால் சூழப்பட்டுள்ள ஒரு மிகப்பெரும்  பிரதேசமாகும் இந்த தீவுக்கூட்டங்கள் ஒவ்வொண்றும் ஏற்கனவே குறிப்பிட்டது போல பண்டங்களின் சேமிப்பு மீழ் வளங்கல் கடற் கல உபயோகம் போன்ற விவகாரங்களில் முக்கிய இடம் பிடிக்கிண்றனஇவற்றில் பல தனி அரசாகவும் உள்ளன.

இந்த வகையில் இந்திய-யப்பானிய கூட்டு கடலோரப்பிராந்தியங்களில் வளர்ந்து வரும் சவால்களை கையாள்வதற்கு முக்கிய தேவை  என்பதை அவ்விரு நாடுகளும் முக்கிய மூலோபாய கட்டாயமாக பார்க்கிண்றன.

யப்பானுக்கு வட கொறியாவும், இந்தியாவுக்கு பாகிஸ்தானும் அணு யுத அச்சுறுத்தலாக இருக்கின்றன. பல்வேறு வகைகளிலும் இவ்விரு போட்டி நாடுகளுடனும் சீனா நல்லுறவு வைத்துள்ளது.  இந்த இரு நாடுகளையும் கையாள வேண்டுமாயின்,  அமெரிக்க தயவின் மூலமே அது சாத்தியம என்பதுதான், யப்பானுக்கும் இந்தியாவுக்கும் உள்ள நிலையாகும்.

இந்த பின்புலத்தில்தான், யப்பானிய பிரதமர் அபே இந்த விடயத்தில் பல்கோண அணுகுமுறையை கொண்டிருப்பதாக நோக்கப்படுகிறது. இந்தியாவை  யப்பான் தனது சிநேகித ஆசிய சனநாயக வல்லரசு நாடாக பார்க்கிண்றது அமெரிக்காவை பகைத்து கொள்ளாத வகையில் சீனாவையும் சீண்டாத வகையில் இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் தனது சொந்த  அணுகுமுறைகளை கடைப்பிடிக்கிறது என்பது தெரிகிறது.

இந்து சமுத்திர பிராந்தியம் குறித்த  அணுகு முறைகளில் சுதந்திரமான-திறந்த இந்தோ-பசுபிக் மூலோபாயம் என்ற வகையில் சிறீலங்காவையும் மாலை தீவையும் பாகிஸ்தானையும்  இவ்வருட ஆரம் பத்தில் யப்பானிய  வெளியுறவு அமைச்சர் Taro Kono அவர்கள் அணுகி இருந்தார்.

தொடர்ந்து யப்பானிய பாதுகாப்பு அமைச்சர் Itsunori Onodera ஆகஸ்ட் மாதம் கொழும்பிற்கு வருகைதந்திருந்தார்.  அந்த தருணத்தின் போதுஇந்திய அமெரிக்க நாடுகளின்  கடற் பாதுகாப்பு விரிவாக்கலுக்கு ஏற்ற வகையில் ஆர்வத்தை ஏற்கனவே தன்னகத்தே  கொண்டிருக்கும்   சிறீலங்கா கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ள திருகோணமலை துறைமுகத்தையும் பார்வையிட்டார்.

அதே தருணத்தில் ஏற்கனவே திருகோணமலையில் தங்கி நின்ற யப்பானிய கடற்படை கப்பலான Ikazuchi இன் கப்பல் தலைவருடனும் கலந்துரையாடினார்தொடர்ந்து செப்ரம்பர் இறுதியில் இரண்டு யப்பானிய விமானம் தாங்கி கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வந்திருந்தன.

இந்த கப்பல்களின் வருகை இந்து சமுத்திர பிராந்தியத்திலும் அதன்  வர்த்தக கடற்பாதைகளிலும் யப்பான் கொண்டிருக்கும் அதீத கேந்திரஇராசதந்திர ஆர்வத்தை காட்டுவதாக அமெரிக்க பார்வையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த அடிப்படையில்தான் யப்பான், அண்மைக்காலமாக சிறீலங்கா மீது அதீத ஆர்வத்தை காட்டி வருகிறது. சீன விரிவாக்கத்தை இதர பிராந்தியங்களில் கையாளும் நோக்கத்திலேயே யப்பான் சிறிலங்கா மீது அர்வம் காண்பித்துவருகிறது என்பதும் அவ்வாறான  ஆய்வாளர்களின் பார்வையாக உள்ளது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் அந்த கப்பல் தலைவர் கூறிய கருத்துகளின் படி கடற் கல நகர்வுகளில் தனி ஒரு வல்லரசு ஏகாதிபத்தியம் செலுத்துவதை தவிக்கும் நடவடிக்கையே இதுவாகும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

நாற்கர கூட்டு யப்பானிய பார்வையில் எவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை மேலும் பார்ப்பதாயின் ஆவுஸ்திரேலியாவுடன் யப்பான் கொண்டிருக்கும் உறவுநிலையிலிருந்து சில உதாரணங்களை எடுத்து நோக்கலாம்.

சர்வதேச நாடுகள் மத்தியிலான உறவில் தற்போது அதிகம் பாவனைக்கு உள்ளாகி உள்ள சொற்பதங்களில் 2+2 என்ற சொற்பதம் அதிகமாக பயன் படுத்தப்படுகிறதுஇதன் அர்த்தம் வெளியுறவும் பாதுகாப்பும் என்பதே ஆகும். இரு தேசங்களின் இரண்டு துறை அமைச்சகளும் அல்லது துறைசார் அலுவலர்களும்  ஒரே நேரத்தில் சந்தித்து கொள்வது பெதுவான பண்பாகி உள்ளதுதற்போது அவுஸ்திரேலியா யப்பான் உறவிலும் 2+2 சந்திப்பு இம் மாதம் 10 ஆம் திகதி இடம் பெற்றள்ளது.

கடந்த சில மாதங்களில் யப்பான் மிக வேகமாக தனது வெளியுறவு பாதுகாப்பு பற்றி சிந்தித்து வருகிறது என்பதை அடுத்தடுத்து இடம் பெறும் யப்பானிய அமைச்சர்களின் பயணங்களில் இருந்து கண்டு கொள்ளலாம். சனநாயகத்தின் பெயரால் அவுஸ்திரேலியாவும் யப்பானும் 1952 ஆம் ஆண்டிலிருந்து மிக நீண்ட உறவை வைத்துக்கொண்டுள்ளனஇந்தியாவுடனும் அமெரிக்காவுடனும் யப்பான் எத்தகைய உறவை வைத்திருந்தோ அதேபோல அவுஸ்திரேலியாவுடனும் சீன எதிர் மூலோபாயமாக தனது உறவை வைத்திருக்க முனைந்துள்ளது.

அதேவேளை அவுஸ்திரேலியாவில் சீனாவின் செல்வாக்கு அதிகம் இருக்கிறது என்னும் மேலைத்தேய பார்வை ஒன்றும் உள்ளதுஇவை எல்லாவற்றின் மத்தியிலும் நாற்கர கூட்டு மிகவும் கடினமான இராசதந்திர நலன்களின் அடிப்படையில் நகர்கிறது.

கிறகாம் அலிசன் (Graham Allison, director of Harvard Kennedy School's Belfer Center for Science and International Affairs)  போன்றவர்கள் குறிப்பிடுவது போல்   ‘Thucydides Trap’ன்னும் கருத்தின் வழி விளக்க முற்படுவது -  எங்கெல்லாம் ஒரு ஏகாதிபத்திய  வல்லரசு தனது அதிகாரத்திற்கு ஆபத்து வருகிறது என்ற உணர்கிறதோ அங்கொல்லாம் எப்பொழுதும் பொதுவாக யுத்தமே முடிவாக அமைந்திருக்கிறது . ஆனால் அத்தகைய நிலைமை மனித குலத்தின் நன்மைகளின் அடிப்படையிலிருந்து தீர்மானிப்படுவதில்லை

 

லோகன் பரமசாமி, இங்கிலாந்தை தளமாக கொண்டு இயங்கிவரும் சர்வதேச உறவுகள் தொடர்பான சுயாதீன ஆய்வாளராவார்.